உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து, ஆரஞ்சு டோர் உங்களுடன் தனியாகவோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியும்.
இடம்பெயர்வு நிலையைப் பொருட்படுத்தாமல் ஆரஞ்சு டோர் அனைவரையும் வரவேற்கிறது. நீங்கள் ஒரு புலம்பெயர்ந்தவராகவோ அல்லது அகதியாகவோ அல்லது நிரந்தர வதிவிட உரிமை இல்லாதவராகவோ இருந்தால் உதவி அல்லது ஆதரவை நாடலாம்.
வன்முறை நின்ற பிறகும் மக்கள் குடும்ப வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆரஞ்சு டோர் பணியாளர்கள் அறிவார்கள். கடந்த காலத்தில் நீங்கள் குடும்ப வன்முறையை அனுபவித்திருந்தால், இப்போது உதவி தேவைப்பட்டால், ஆரஞ்சு டோரைத் தொடர்பு கொள்ளவும்.